துபாயில் நிறைவடைந்த சந்தானத்தின் சர்வர் சுந்தரம்

செவ்வாய், 4 அக்டோபர் 2016 (21:10 IST)
சந்தானம் நாயகனாக நடித்து வந்த, சர்வர் சுந்தரம் படம், துபாய் ஷெட்யூல்டுடன் நிறைவடைந்துள்ளது.
 

 
தில்லுக்கு துட்டு படத்துக்கு முன்பே சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் சந்தானம். கெனன்யா பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ் இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
 
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் சர்வர் சுந்தரத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கடைசிகட்ட படப்பிடிப்புக்காக துபாய்க்கு படக்குழு சென்றது. அங்கு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக அறிவித்துள்ளனர்.
 
சந்தானத்தின் அடுத்த வெளியீடாக சர்வர் சுந்தரம் படம் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்