சந்தானம் நடிக்கும் ‘குலு குலு’…. வெளியான கலக்கலான ஃபர்ஸ்ட் லுக்!

செவ்வாய், 10 மே 2022 (17:50 IST)
சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கும் குலு குலு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு குலு குலு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவரின் ஒருவரின் கதையாக உருவாகும் இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகளை சந்தானம் தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது. லாரியை கவிழ்த்துவிட்டு ஜாலியாக சந்தானம் சீட்டுக்கட்டு விளையாடுவது போல போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்