‘நண்பேண்டா’ சந்தானத்தின் படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்… வெளியான அறிவிப்பு!

புதன், 13 ஜூலை 2022 (09:09 IST)
சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கும் குலு குலு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்த படத்துக்கு குலு குலு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவரின் ஒருவரின் கதையாக உருவாகும் இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் இப்போது ஜூலை 29 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் ‘குலுகுலு’ படத்தையும் கைப்பற்றியுள்ளார். உதயநிதியின் ஆரம்பகால படங்கள் பலவற்றில் சந்தானம் அவரோடு இணைந்து நடித்திருந்தார். இருவரும் நீண்ட காலம் நெருங்கிய நண்பர்களாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Udhayanidhi Stalin (@udhay_stalin)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்