சந்தானம் நடித்த ‘குலுகுலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெள்ளி, 8 ஜூலை 2022 (18:17 IST)
சந்தானம் தற்போது தொடர்ச்சியாக ஹீரோ வேடத்தில் நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து முடித்துள்ள திரைப்படத்தில் ஒன்றான ‘குலுகுலு’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிரசாந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘குலுகுலு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படப்பிடிப்பில் லண்டன் பாங்காக் உள்பட பல பகுதிகளில் நடந்தது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்தது என படக்குழுவினர் அறிவித்தனர்.
 
இந்த நிலையில் தற்போது ‘குலுகுலு’  திரைப்படம் ஜூலை 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்