கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பார்த்துக்கொள்வதில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் போலவே ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கியூட் மகள் ஐலாவின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். சஞ்சீவ் ஜாடையில் இருக்கும் குழந்தைக்கு வாழ்த்துக்களும் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.