பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நம்பி எதிர்பார்த்திருக்கிறார்.
அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி “எனக்கு சசிகுமார்தான் நெருங்கிய நண்பன். ஒருமுறை அவன் கையில் இருந்த கடிகாரம் அழகாக இருக்கிறதே என்று பார்த்தேன். உடனே என்னை வாட்ச் ஷோரூமுக்கு அழைத்து சென்று உனக்குப் பிடித்த வாட்ச்சை வாங்கிக்கொள் என சொன்னான். நான் உன் கையில் இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது என சொன்னேன். உடனே அதை என் கையில் கொடுத்துவிட்டு அவன் புதிதாக வாங்கிக் கொண்டான்.