இயக்குனர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி ஆகிய படங்களுக்கு பிறகு இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகியோர் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் வெளியானது.
இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் சமுத்திரக்கனி இந்த படத்துக்காக 8 நாட்கள் பிணமாக மட்டுமே நடித்துள்ளேன். 8 நாட்கள் என்னை வெறுமனே க் கண்ணை மூடி படுக்க சொல்லி படமெடுத்தார்கள் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நம்மவர் படத்தில் நாகேஷ் இதுபோல பிணமாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.