வைரலாகும் சமந்தாவின் காதலுருக்கான இன்ஸ்டாகிராம் வீடியோ!!

ஞாயிறு, 29 ஜனவரி 2017 (11:43 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. 


 
 
கூடிய விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தனது காதலர் நாக சைதன்யாவுக்காக வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
ஏற்கனவே தனது காதலருக்கு 27 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை சமீபத்தில் சமந்தா பரிசளித்திருந்தார். இந்நிலையில் நாக சைதன்யா மீதான தனது காதலை வெளிப்படுத்தும் வகையில், இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். 
 
அந்த வீடியோவில், ”என் காதல் பக்கங்களில் இருந்து உனக்காக என் அன்பே..” என சமந்தா குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்