தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோ நாக சைத்தாயாவிற்கும், நடிகை சமந்தாவிற்கும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து தேனிலவிற்காக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு சென்றனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா, மாலத்தீவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து ஓய்வெடுத்து வருகிறார். அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்தார். இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும், நாகர்ஜூன் மருமகள் இவ்வாறு நீச்சல் உடை அணிவதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவர்களுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் சமந்தார். அதில், “என்னுடைய விதிமுறைகளை நான் வகுத்துக் கொள்கிறேன்.உங்களுடைய விதிகளை நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்”, என குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்றவர்களால் எதை உறுதியாக செய்ய முடியாதோ, அதை உறுதியுடன் செய்பவளே வலுவான பெண் எனவும் குறிப்பிட்டுள்ளார்.