சமந்தா நாகர்ஜுனா உரையாடல்: இணையத்தில் வைரலாகும் வாட்ஸ் ஆப் பதிவு!!

வியாழன், 18 மே 2017 (14:37 IST)
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிகை சமந்தாவுடன் உரையாடிய வாட்ஸ் அப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 
 
நாகார்ஜுனாவும், சமந்தாவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து காதலர்களாகி தற்போது திருமணத்துக்கு தயாராகி வருகின்றனர்.  இவர்களது திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரிய நிகழ்வாக அமையவுள்ளது.
 
இதனிடையே, இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா தயாரித்து நடித்து வரும் 'ராரண்டோய் வேதுகா ​சூடாம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
 
இதனை பார்த்த சமந்தா இது குறித்து தனது மாமனாரான நாகர்ஜுனாவிடம் வாட்ஸ் ஆப்பில் பேசியுள்ளார். இந்த உரையாடலை நாகர்ஜுனா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
இதுவரை 'ராரண்டோய் வேதுகா ​சூடாம்' டிரைலரை சுமார் 2 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்