தற்போது, விஜய்யுடன் ஒரு படம், விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என தமிழில் சில படங்களை கமிட் ஆகியுள்ளார்.
மேலும், நாகர்ஜுனா ஜோடியாக ஒரு தெலுங்கு படம், ராம் சரண் ஜோடியாக ஒரு தெலுங்குப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சமந்தா.
இந்நிலையில், சமந்தா பிஸியாக இருக்கும் போது நேரம் கிடைக்கும் போது வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அதுபோல சில நாட்களுக்கு முன்பு தான் விடுமுறைக்கு செல்வதாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.