இந்த லாக்டவுன் விடுமுறையில் மற்ற நடிகைகள் போல் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடாமல் தொடர்ந்து உருப்படியான வேலைகளை செய்து வருகிறார் சமந்தா. வீட்டிலேயே விவசாயம், யோகா ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் சமந்தா இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும், இவை அனைத்தும் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை பராமரிக்கும், வீடியோ ஒன்றை நடிகை சமந்தா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இருவரின் ரசிகர்களால் வைரலாகி வருகிறது
செடிகளை பராமரிக்கும் சேலஞ்சை ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் அவர்கள் தான் சமந்தாவுக்கு கொடுத்தார் என்பதும், அந்த சேலஞ்சை நிறைவேற்றிய சமந்தா, தனது தரப்பில் இருந்து கீர்த்திசுரேஷ், ராஷ்மிகா மற்றும் தனது ரசிகர்களுக்கு அளிப்பதாகவும் குறைந்தது மூன்று செடிகள் நட்டு, அதனை பராமரிக்க வேண்டும் என்றும் சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.