சல்மான் கான் படத்தை தமிழில் வெளியிடும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ

திங்கள், 26 அக்டோபர் 2015 (10:40 IST)
சல்மான் கான் நடித்துள்ள, பிரேம் ரத்தன் தான் பயோ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. சல்மானுடன் சோனம் கபூர், அனுபம் கெர் என பலர் நடித்துள்ளனர். சல்மான் கானின் குடும்ப சென்டிமெண்ட் படம், மைனே பியார் கியா போன்று இந்தப் படம் தயாராகியுள்ளது.


 
ராஜஸ்ரீ புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் மோழிமாற்றம் செய்து வெளியிடுகிறது.

தீபாவளிக்கு கமல் நடித்த தூங்கா வனம், அஜித் நடித்த வேதாளம் ஆகியவையும் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்