பாலிவுட்டிலும் சுமார் 23 ஆயிரம் சினிமா தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானமின்றி பசியால் வாடுவதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், அந்த 23 ஆயிரம் தலா ரூபாய் 3000 சுமார் 7 கோடி ரூபாய் நிதியுதவி செய்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பேசியுள்ள சல்மான் கான் ‘வெளியே செல்லாதீர்கள், கூட்டம் கூட்டாதீர்கள். குடும்பத்துடன் இருங்கள். உங்கள் குடும்பத்தைக் கொல்ல வேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் வெளியே செல்லுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வந்தால்கூட உரிய பாதுகாப்போடு வந்து செல்லுங்கள்.
மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் உங்கள் உயிரைக் காப்பாற்ற உழைக்கிறார்கள். ஆனால் சிலர் மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடுகின்றனர். எங்கு ஓடுகிறீர்கள்? வாழ்வை நோக்கியா, சாவை நோக்கியா? சில கோமாளிகளால் ஒட்டு மொத்த இந்தியாவும் இப்போது வீட்டில் முடங்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.