சாதனைப் படைத்த சாய்பல்லவியின் பாடல்!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:13 IST)
நடிகை சாய்பல்லவி நடித்துள்ள தெலுங்கு படமான லவ் ஸ்டோரி படத்தின் சாரங்கா டாரியா என்ற பாடல் 3 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில அவர் தெலுங்கில் நாக சைதயன்யாவுடன் நடித்துள்ள லவ் ஸ்டோரிஸ் படத்தின் சாரங்கா டாரியா என்ற பாடல் கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது அந்த பாடல் 300 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்