உலகிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லர் வீடியோ: அதிர்ச்சியில் பிரபல நடிகை

புதன், 12 ஆகஸ்ட் 2020 (20:05 IST)
பாலிவுட் பிரபல நடிகை ஆலியாபட் நடித்த ’சதக் 2’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது
 
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று ஆலியாபட் உள்பட படக்குழுவினர் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர் 
 
ஆனால் இந்த ட்ரெய்லர் வெளியான ஒரு சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிஸ்லைக்குகள் பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆலியாபட் கூறியதும் நெப்போட்டிஸம் சர்ச்சையில் சிக்கியதும் தான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது 
 
ஒரு மணி நேரத்தில் உலகிலேயே அதிக டிஸ்லைக்குகளை பெற்ற வீடியோ ஆலியாபட் நடித்த ‘சதக் 2’ படத்தின் வீடியோ தான் என்ற தகவல் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்