படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலேயே நடத்த படக்குழு திட்டமிட்டு இதற்காக ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
மேலும், ''நடிகர் விஜய் இன்று இந்த உயரத்தில் இருப்பதற்கு காரணம் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான். ஆரம்பகாலத்தில், விஜய் சினிமாவில் முன்னுக்கு வர கடினமாக உழைத்து, அவருக்கு உதவியுள்ளார். நாளைய தீர்ப்பு படத்தில் இருந்து பார்க்கிறேன் விஜய் சிறிதும் மாறவில்லை'' என்று விஜய்யை பாராட்டியுள்ளார்.