செல்வராகவன் மேல் கோபம்… ஆனாலும் உதவி இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்!

செவ்வாய், 1 ஜூன் 2021 (16:21 IST)
செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் இயக்கும் படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் ப்ளான் போட்டு பக்காவாக படத்தை எடுப்பதில் கில்லாடியாக திகழ்பவர் எஸ் ஆர் பிரபு. ஆனால் அவரையே சுத்தலில் விட்ட ஒரு படம் என்றால் அது என் ஜி கே தான். திட்டமிட்டதை விட பல மாதங்கள் இழுத்து, திரும்ப திரும்ப ஷூட் செய்து பட்ஜெட்டை ஏற்றி ஒருவழியாக படம் என்று ஒன்றை எடுத்துக்கொடுத்தார் செல்வராகவன். அந்த படத்தால் நஷ்டத்தை சந்தித்தார் எஸ் ஆர் பிரபு. எல்லா குழப்பங்களுக்கும் காரணம் செல்வராகவன்தான் என்று அவர் மேல் கடும்கோபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் அந்த படத்தில் பணியாற்றிய செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தை இப்போது அவரே தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்