சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம், எஸ் 3 என்ற பெயரில் தயாராகி வருகிறது. வழக்கம் போல் சூர்யா - அனுஷ்கா நடிக்கின்றனர். கூடுதலாக ஸ்ருதி.
இந்தப் படத்தில் ஸ்ருதி, வித்யா என்ற பத்திரிகையாளராக வருகிறார். வில்லனைப் பிடிக்க நாயகன் சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம். சபாஷ் நாயுடுவுக்காக யுஎஸ் சென்றவர் தற்போது மீண்டும் எஸ் 3 படப்பிடிப்புக்காக
திரும்பி வந்துள்ளார். இந்த மாத இறுதியுடன் எஸ் 3 படத்தை நிறைவு செய்து மீண்டும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் இணைகிறார்.
எஸ் 3 படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.