முன்பதிவில் மட்டுமே ரூ.120 கோடி! கற்பனையிலும் எட்டமுடியாத விவேகம் வியாபாரம்

புதன், 23 ஆகஸ்ட் 2017 (23:10 IST)
அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் முதல் விமர்சனம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வந்துவிடும். இந்த நிலையில் இந்த படத்தின் முன்பதிவின் வசூல் கோலிவுட் திரையுலகினர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது..



 
 
வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களின் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.120 கோடியை தொட்டுவிட்டதாம். மேலும் முதல் வாரத்தில் இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.
 
ரூ.110 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதால் போட்ட முதலீடை முதல் வாரத்தில் எடுத்தது மட்டுமின்றி கணிசமான தொகை லாபமாகவும் தேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரிசல்ட்டை பொருத்து ஆங்கிலம் ஜப்பான், சீன மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்

வெப்துனியாவைப் படிக்கவும்