சத்தியம் தியேட்டரில் 5 ஸ்கிரீன்ல படம் ஓட்டுவோம்... உதயநிதி!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (11:00 IST)
சத்தியம் திரையரங்கில் உள்ள ஆறு ஸ்கிரீன்களில் ஐந்து ஸ்கிரீன்களில் ஆர் ஆர் ஆர் திரையிடப்படும் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 

 
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் உதயநிதி ஸ்டாலின் பின்வருமாறு பேசினார். அவர் கூறியதாவது, 
 
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை 3 தமிழக ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் நான் உறுதியாக கூறுகிறேன், சத்தியம் திரையரங்கில் உள்ள ஆறு ஸ்கிரீன்களில் ஐந்து ஸ்கிரீன்களில் ஆர் ஆர் ஆர் திரையிடப்படும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்