விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் வெளியிட்ட ப்ரோமோ!

வியாழன், 10 டிசம்பர் 2020 (11:20 IST)
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ராக்கி படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் வாங்கி வெளியிட உள்ளார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ராமு கலை இயக்குனராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த படம் தீபாவளிக்குப் பின்னர் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இயக்குனர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளராக அறியப்பட்ட விக்னேஷ் சிவன் இப்போது விநியோகஸ்தராகவும் மாறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது ராக்கி படத்தை வாங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரௌடி பிக்சர்ஸ். சமூகவலைதளங்களில் இந்த ப்ரோமோ கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தை ஜனவரி மாத இறுதியில் ரிலிஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்