தவசி மறைவு குறித்து ரோபோ சங்கர் கூறியபோது, தவசி அண்ணனை கடைசியாக பார்த்தது நான்தான் என்றும் எல்லா கலைஞர்களும் நிறைய உதவி செய்துள்ளார்கள் என்றும் அவர் இறந்த செய்தியைக் கேட்க எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்றும் கேட்கும் கூறினார். என்கிட்ட ஐஅம் பேக்ன்னு சொன்னார் என்று நினைத்து நினைத்து நான் தான் வருத்தப்படுவதாகவும், தயவு செய்து அவரது குடும்பத்திற்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்றும் ரோபோ சங்கர் கூறினார். மேலும் இந்த நோயை ஆரம்பத்திலேயே அவர் கவனித்து இருந்தால் கண்டிப்பாக அவர் குணமாகி இருப்பார் என்று கூறிய ரோபோ சங்கர் தவசியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார்