யாஷிகா உடன் காதலா? நெருக்கமான போட்டோவுக்கு விளக்கம் கொடுத்த மச்சான் ரிச்சர்ட்!

செவ்வாய், 6 ஜூன் 2023 (20:42 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வரும் அவர், சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார். 
 
சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்தன. இதையடுத்து இப்போது உடல்நலம் தேறியுள்ள அவர் மீண்டும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.  
 
இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகரும், அஜித்தின் மனைவி ஷாலியின் தம்பியுமான ரிச்சர்ட் யாஷிகாவோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதையடுத்து இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் தீப்போல ரசிகர்கள் மத்தியில் பரவி வந்தது.
 
இந்நிலையில் தற்போது இதுகுறித்து முதன் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார் ரிச்சர்ட். அதாவது, அவர்கள் நடித்து வரும் 'சில நொடிகளில்' என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி ஒரு விஷயத்தை செய்தாராம்.  தற்போது பாடல் காட்சியில் நடித்த போட்டோவை வெளியிட்டு " cut " என கேப்ஷன் கொடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்