இது படம் இல்ல பாடம்… கே ஜி எஃப் 2 படத்தைப் பாராட்டிய முன்னணி இயக்குனர்!

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:08 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் 134.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பல திரையுலகினரும் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில் தற்போது இன்று நேற்று நாளை மற்றும் அயலான் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் “படம் எடுப்பதற்கு வகுப்பெடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவு மாஸ்டர்ஸ் இருவரும் அதகளம் செய்திருக்கிறார்கள். இன்னொரு நேசனல் அவார்ட் கன்பர்ம். கன்னட சினிமாவிலிருந்து ஒரு சர்வதேசதரத்திலான படம். பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய படைப்பு” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்