தளபதி 66 படத்தின் கதாநாயகி இவர்தான்… வெளியான தகவல்!

செவ்வாய், 8 மார்ச் 2022 (16:27 IST)
ராஷ்மிகா மந்தனா விஜய்யின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

காவலன் படத்துக்கு பிறகு விஜய் ஆக்‌ஷன் கம்மியாகவும், செண்ட்டிமெண்ட் மற்றும் காதல் காட்சிகள் அதிகமாகவும் கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யைத் தவிர பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. பீஸ்ட் படத்தின் கதாநாயகி தேடுதலின் போதும் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நடந்து அதில் பூஜா தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் இந்த முறை வெல்லப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருந்தது.

அதற்கு இப்போது விடைக் கிடைத்துள்ளது. இந்த முறை விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. ஏப்ரல் 2 ஆம் தேதி இவர்கள் இருவரும் நடனமாடும் காட்சி சென்னையில் செட் அமைத்து யுகாதி அன்று தொடங்க உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்