160 மொழிகளில் வெளியாகும் ’அவதார் 2’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

புதன், 27 ஏப்ரல் 2022 (11:57 IST)
உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது
 
இருபத்தி நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 284 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்
 
டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் உலகில் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படம் வசூலில் உலக சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்