பாகுபலி பிரபாஸ்-க்கு போஸ்டர் அடித்து பெண் தேடிய ராணா!!
சனி, 20 மே 2017 (09:52 IST)
பாகுபலி படத்தின் வெற்றியின் மூலம் நடிகர் பிரபாஸ் மற்றும் ராணா அனைவரும் விரும்பும் நடிகர்களாய் மாறியுள்ளனர். அவர்களை பற்றி எந்த செய்தி வந்தாலும் அது வைரலாகி விடுகிறது.
இந்நிலையில், ராணா பிரபாஸ்-க்கு திருமணம் செய்ய பெண் தேடி போஸ்டர் அடித்தது தற்போது வைரலாகி வருகிறது. 35 வயதை தாண்டிய பிரபாஸ் இன்னும் திருமணம் ஆகமால் இருக்கிறார்.
அனுஷ்காவோடு காதல், திருமணம் என கிசுகிசுக்கப்பட்டாலும் அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் இருவரும் தங்களது வேலையை பார்க்கின்றனர்.
2016 ஆம் ஆண்டு பிரபாஸ்-க்கு பெண் தேடி டுவிட்டரில் திருமண விளம்பர போஸ்டர் ஒன்றை வெளியிட்டார் ராணா. அப்போது விளையாட்டிற்காக வெளியிட்ட இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.