இங்கிலீஷ் படத்தில் தாதா கேரக்டரில் நடிக்கும் நடிகர் ராம்கி

திங்கள், 25 செப்டம்பர் 2017 (11:38 IST)
குமரேஷ் குமார் இயக்கத்தில் நடிகர் ராம்கி தாதாவாக நடிக்கும் படம் `இங்கிலிஷ். இப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் ஆர்.ஜே.எம்.வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
கதாநாயகன் ராம்கி, மீனாட்சி, ஸ்ரீஜா நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ்  உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 
 
சாய்சதிஷ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு நௌசாத் பின்னணி இசையை உருவாக்கி உள்ளார். வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்