ராமானுஜன் திரைப்படத்துக்கு நார்வே விருது

புதன், 6 மே 2015 (10:53 IST)
கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை கதை, ராமானுஜன் என்ற பெயரில் படமானது. இப்படத்தை ஞானராஜசேகரன் இயக்கியிருந்தார். கேம்பர் சினிமா சார்பில் ஸ்ரீவத்சன் நடாதூர், சண்யா நடாதூர், சுஷாந்த்தேசாய், சிந்து ராஜ சேகரன் தயாரித்திருந்தனர். இதில் ஜெமினி கணேசன்-சாவித்திரியின் பேரன் அபிநய் நாயகனாகவும், பாமா நாயகியாவும் நடித்திருந்தனர். 
 
இந்நிலையில், இப்படம் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தயாரிப்புக்கான விருதை பெற்றுள்ளது. 
நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் கடந்த ஏப்ரல் மாதம் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்தவர்கள் வெகுவாக பாராட்டி மிகுந்த வரவேற்பை அளித்துள்ளார்கள். சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளிலும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 
 
ஓஸ்லோவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், ராமானுஜன் படத்திற்கான சிறந்த தயாரிப்பு விருதினை தயாரிப்பாளர் சுஷாந்த் தேசாய் பெற்றுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்