ரூ.1300 கோடி: இந்த நடிகருக்கு இவ்வளவு சொத்தா...?

வியாழன், 7 பிப்ரவரி 2019 (19:57 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மகதீரா படம் சூப்பர் ஹிட் அடித்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி ஜிட்டுகளை கொடுத்தார். 
 
தற்போது டோலிவுட்டின் முக்கிய நடிகராக இவர் உள்ளார். அதோடு சிரஞ்சீவி - நயன்தாரா நடிக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படம் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். 
 
இவர் அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்திலும் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலை ராம் சரணின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
ராம் சரணிடம் ரூ.1,300 கோடி சொத்து உள்ளதாகவும், இவர்தான்  தெலுங்கில் அதிக சொத்து வைத்துள்ள நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
 
ஐதராபாத் ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் ராம் சரண் ரூ.38 கோடி செலவில் புதிதாக சொகுசு வீடும் கட்டி இருக்கிறாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்