கார்த்தியுடன் சைக்கிள் ரிக்‌ஷாவில் சுற்றிய ரகுல் ப்ரீத்சிங்!!

செவ்வாய், 25 ஜூலை 2017 (20:20 IST)
ரகுல் ப்ரீத்சிங் சைக்கிள் ரிக்‌ஷாவை ஓட்ட, பின்னால் அமர்ந்து ஜாலியாகச் சென்றுள்ளார் கார்த்தி.


 
 
‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றுக்காக, சைக்கிள் ரிக்‌ஷாவில் கார்த்தியை வைத்து ரகுல் ப்ரீத்சிங் ஓட்டுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
 
இப்படிப்பட்ட காட்சிகள் இதற்கு முன் வந்திருந்தாலும், பெரும்பாலும் உடன் ஆடும் துணை நடனக் கலைஞர்கள் சைக்கிள் ரிக்‌ஷாவை தள்ளிக்கொண்டு வருவார்கள். ஆனால், அப்படி இல்லாமல், ரகுல் ப்ரீத்சிங்கே ரிக்‌ஷாவை ஓட்டியுள்ளார்.
 
சைக்கிள் ரிக்‌ஷாவில் இருக்கும் ப்ரேக், ரெகுலர் ப்ரேக் கிடையாது. நான் அதை ஒழுங்காக ஓட்டுவேனா என ரிக்‌ஷா டிரைவருக்குப் பயம். படப்பிடிப்பு நடக்கும்போது நான்கைந்து முறை என்னருகே வந்துவிட்டார். இது ஜாலியான அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.

வெப்துனியாவைப் படிக்கவும்