தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து தனுஷின் பிறந்த நாளில் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட ரகிட’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்ப்போது இந்த பாடலின் சென்னை சூப்பர் கிங்ஸ் வெர்ஷனை CSK அணி வெளியிட்டுள்ளதை படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டர் பகிர்ந்து CSK ரசிகரகளை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுளளார்.