எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர்.பாரத், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டி.எஸ்.வினாயகம்(70), கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்
இதை தொடர்ந்து நேற்று சென்னையில் அவர் காலாமானார். டி.எஸ்.வினாயகம், பிரபல ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராயிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து, பின்னர் ஒளிப்பதிவாளராக சினிமா துறையில் உயர்ந்தார்.
ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்க, ரஜினி நடித்த மிஸ்டர்.பாரத், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், குரு சிஸ்யன் உள்ளிட்ட எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.