ரஜினியின் ‘தலைவர் 171’ டைட்டில் இதுதான்.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

Mahendran

திங்கள், 22 ஏப்ரல் 2024 (18:38 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வீடியோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் ’தலைவர் 171’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ’கூலி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பே ஒரு வீடியோ வெளியாகும் நிலையில் இந்த படத்திற்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அதில் ரஜினியின் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 
 
மேலும் இந்த படத்திற்கு ’கூலி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மூன்று நிமிடத்திற்கு மேலாக வெளியாகி இருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போதே இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் ஒரு விருந்தாக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்