32 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினி – மம்முட்டி காம்போ?! – தலைவர் 171 எகிறும் எதிர்பார்ப்பு!

புதன், 13 செப்டம்பர் 2023 (12:32 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள ரஜினிகாந்தின் 171வது படத்தில் மம்முட்டி இணைய உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருவது லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் அடுத்த மாதம் வெளியாக உள்ள “லியோ” படம். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பே இன்னும் முடியாத நிலையில் அடுத்து ரஜினிகாந்த் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜுக்கென ஒரு ரசிகர் கூட்டம் உள்ள நிலையில் ரஜினிகாந்த் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படம் எப்படி இருக்கும் என இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் லோகேஷ் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி – மம்முட்டி இணைந்து நடித்து மணிரத்னம் இயக்கத்தில் 1991ல் வெளியான ‘தளபதி’ திரைப்படம் இன்றளவும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

நட்புக்கு உதாரணமாக சூர்யா – தேவா நட்பை சொல்லும் அளவு பேமஸ் ஆன இந்த படத்திற்கு பின் ரஜினி – மம்முட்டி இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில் இருவரும் 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் ‘தலைவர் 171’ மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்