ரஜினி எனது குரு.....ஆன்மீக அரசியல்....ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அரசியல் அறிக்கை...

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (21:12 IST)
தன் அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்துக்கு பலரும் கூட்டணிக்காக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் ரஜினி விரும்பினால் பாஜக அவருடன் கூட்டணி சேரலாம் என்று பாஜக துணைத்தலைவர் நயினார் ராகேந்திரன்நேற்று  தெரிவித்தார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு 90களில் இருந்து தொடர்ந்து வருகிறது. அவர் குரலுடைய மதிப்பு தெரிந்து அத்தனை கட்சிகளும் அழைத்தாலும் தன் நண்பர் கமல்ஹாசனுடன் இணக்கமாக இருந்து அவருடன் கூட்டணி வைப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து ஏற்கனனவே அரசியலுக்கு வராமலும் சேவை செய்யலாம் என தெரிவித்திருந்த ராகவா லாரன்ஸ்இதனையடுத்து, நடிகர் ராகவா லாரன்ஸ் தனது  டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், அரசியலில் நேர்மறை அரசியல் செய்யவேண்டும் யாரையும் புண்படும்படி பேச வேண்டாம்!  இந்தியாவில் அந்த மாதிரி நேர்மறையான அரசியலை எனது குரு ரஜினி ஆரம்பிப்பார் என்று நம்புகிறேன்.

அத்துடன் ரஜினி தொடங்கவுள்ள  ஆன்மீக அரசியலில் இணையும் தொண்டர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்துள்ளார்.

எனவே நடிகர் ரஜினி இந்தப் பிறந்த நாளிலாவது தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரோ என இருவரது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்