படப்பிடிப்பின்போது காயமடைந்த ரஜினி

ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (09:11 IST)
சென்னையில் 2.0 படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



 
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படம் ரூ.350 கோடி செலவில் தயாராகி வருகிறது. இதில், அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.
 
அண்மையில் 2.0 படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். மிக பிரம்மாண்டமான முறையில் இந்த விழா நடைப்பெற்றது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பின்போது ரஜினி காயம் அடைந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்