மகளா? நண்பனா? படுகுழப்பத்தில் ரஜினிகாந்த்!

சனி, 29 பிப்ரவரி 2020 (19:20 IST)
மகளா? நண்பனா? படுகுழப்பத்தில் ரஜினிகாந்த்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் முடிந்துவிடும் என்று தெரிகிறது. இதனை அடுத்து ’தலைவர் 169’ திரைப்படத்தை கமலஹாசன் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்றும் கூறப் படுகிறது
 
இந்த நிலையில் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான கதைகளை அவர்கள் தற்போது கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே ரஜினியின் அடுத்த படத்தை அவரது இளைய மகள் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் தலைவர் 169  படத்தை தயாரிக்கும் பணியை மகள் சௌந்தர்யாவுக்கு கொடுப்பாரா? அல்லது நண்பன் கமலஹாசனுக்கு கொடுப்பாரா? என்ற குழப்பத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் நினைத்தால் இரண்டு பேருக்கும் அவர் படம் நடித்து கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு செய்தி கூறுகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்