ராஜேஷ் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் கிக் - இன்னொரு ஓபன் தி டாஸ்மாக்

வியாழன், 26 நவம்பர் 2015 (14:18 IST)
ராஜேஷ் இதுவரை இயக்கிய எல்லா படங்களின் பெயர்களும் சற்று வித்தியாசமானவை. சிவா மனசுல சக்தி (எஸ்எம்எஸ்), ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே), பாஸ் என்கிற பாஸ்கரன், ஆல் இன் அழகு ராஜா, கடைசியாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (விஎஸ்ஓபி).


 
 
ராஜேஷ் படங்களின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி குடி காட்சிகள். டாஸ்மாக்கையும், குடியையும் காண்பிக்காமல் படம் எடுத்தால் ராஜேஷின் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும். கோவன் ஒரு துருவம் என்றால் ராஜேஷ் மறு துருவம்.
 
ராஜேஷின் கடைசி இரண்டு படங்களும் தோல்வியடைந்த நிலையில், ஜீ.வி.பிரகாஷை வைத்து அடுத்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர், கடவுள் இருக்கிறான் குமாரு. சுருக்கமாக கிக்  (KIK).
 
பெயறால் கிக் இருப்பதால் தாராளமாக டாஸ்மாக் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.
 
சந்தானமும், சரக்கும் இல்லாத ராஜேஷ் படம் என்ன படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்