ஆஸ்கர் நிகழ்வில் கலந்துகொள்ள 1.4 கோடி ரூபாய் செலவு… RRR படக்குழு செய்த செலவு!

திங்கள், 20 மார்ச் 2023 (15:21 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது. நேரடியாக போட்டி பிரிவில் ஆஸ்கருக்கு இந்த படத்தை பல பிரிவுகளில் நாமினேட் செய்தனர் படக்குழு. இதையடுத்து நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் படக்குழுவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கீரவாணி, பாடல் ஆசிரியர் சந்திரபோஸ், இயக்குனர் ராஜமௌலி மற்றும் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொள்ள கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகியோருக்கு மட்டுமே இலவச டிக்கெட் வழங்கப்பட்டதாம். அதனால் மற்றவர்களுக்கு பணம் செலுத்தியே டிக்கெட் வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக ராஜமௌலி சுமார் 1.4 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்