ரம்யா கிருஷ்ணனிடம் பொது மேடையில் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி!!

செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (15:33 IST)
பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா இயக்குனர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள எஸ்.எஸ்.ராஜமௌலி பொது மேடை ஒன்றில் நடிகை ரம்யாகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


 
 
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பாகுபலி 2 தமிழ் இசை வெளியீட்டு விழாவில் இந்த சம்பவம் அரங்கேறியது. பாகுபலி திரைப்படத்தில் மிக அழுத்தமான கதாப்பாத்திரம் ரம்யாகிருஷ்ணனின் கதாப்பாத்திரம்.
 
இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேறு ஒரு நடிகையை அணுகியதை எண்ணி வெட்கப்படுவதாகவும், அதற்காக ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக​வும் தெரிவித்தார் இயக்குனர் ராஜமௌலி. 
 
முன்னதாக இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க லக்ஷ்மி மஞ்சுவை அணுகியதாகவும் ஆனால் அவர் வயதை காரணம் காட்டி பிரபாஸ், ராணாவுக்கு திரையில் அம்மாவாக நடிக்க விருப்பமில்லை என கூறி வாய்ப்பினை மறுத்துவிட்டதாகவும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்