ராஜமெளலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.
முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகமும் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது. இந்நிலையில் சிவராத்திரி நாளான இன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரமாண்ட வெற்றி பெற்ற பாகுபலியின் இரண்டாம் பாகம் பரபரப்பாக தயாராகி வருகிறது. பாகுபலியின் சாதனையை முறியடிப்பதுதான் இரண்டாம் பாகத்தின் இலக்கு.
பாகுபலி படம் ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்தது. இதனை தொடர்ந்து பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.