ரொம்ப ஓவரா போறீங்க!! புகைப்படத்தை வெளியிட்ட நடிகை: ரவுண்டுகட்டி விமர்சிக்கும் நெட்டிசன்கள்

வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (11:27 IST)
நடிகை ராய் லட்சுமி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்  கொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். 
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.  அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக படங்களில் நடித்தார்.  இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை.  இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவார்.
 
இந்நிலையில் அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், ரொம்ப ஓவரா தான் போறீங்க, உனக்கு வேற வேலையே இல்லையா என சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்