நடிகர் ஆர்யா காதலிக்கிறேன் என்று சொன்னாலும் "அட சரிப்பா அதுக்கென்ன இப்போ" என கேட்கும் அளவிற்கு கேட்பவர்களுக்கே வெறுத்துவிட்டது. காரணம் "எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைகள் தான் ஆனால், கடைசியில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை பெண்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் ஆர்யா.
இந்நிலையில், காதலர் தினத்தன்று தங்களின் திருமணத்தை நடிகர் ஆர்யா, சாயிஷா டுவிட்டர் மூலம் அறிவிப்பை வெளியிட்டனர். அதில், வரும் மார்ச் மாதத்தில் சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் ஆர்யா, சாயிஷா ஆகியோர் சூர்யா, மோகன்லால் நடிக்கும் காப்பான் படித்தில் நடித்துவருகின்றனர். வெளிநாட்டில் இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.