அது சாதாரண பகையில்ல.. 200 வருஷத்து பகை.. ‘சந்திரமுகி 2’ டிரைலர்..!

ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (18:33 IST)
ராகவா லாரன்ஸ் நடித்த ’சந்திரமுகி 2’ படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலரை லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
சந்திரமுகியின் அரண்மனைக்கு ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தோடு வருவதும் அதன் பிறகு நடக்கும் மர்மமான விஷயங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது 
 
நகரத்து இளைஞர் மற்றும் வேட்டையன் என இரண்டு கேரக்டர்களில் ராகவா லாரன்ஸ், சந்திரமுகி கேரக்டரில் கங்கனா ரனாவத் ஆகியோர் நடித்துள்ளனர். பி. வாசு இயக்கத்தில் எம் எம் கீரவானி இசையில் உருவான இந்த படம் படத்தில் வடிவேலு படத்தின் முதுகெலும்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மொத்தத்தில் சந்திரமுகி 2 படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்