ராகவா லாரன்ஸின் ‘அதிகாரம்’ செகண்ட்லுக் போஸ்டர்!

வியாழன், 24 ஜூன் 2021 (20:43 IST)
adhigaram
ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் அதிகாரம் என இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் கதை வசனத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிகாரம் படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் அதிகாரம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் 
 
இந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் பாஸ்போர்ட் போன்ற ஒரு புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராகவாலாரன்ஸ் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான கெட்டப்பில் இந்த படத்தில் இருக்கிறார். மேலும் அவரது பெயர் முருகேசன் என்றும் இணை பெயர் தமிழ்வேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்