ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth

சனி, 19 அக்டோபர் 2024 (14:11 IST)
பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாக்களைக் கண்டபடி வறுத்தெடுத்து விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பிறகு அவருக்கு ‘தீயா வேல செய்யணும் குமாரு’ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த நானும் ரௌடிதான் படம் அவரைப் பிரபல நடிகராக்கியது.
 
அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
 
அப்படி ஆர் ஜே பாலாஜி நடிக்கும் படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் இணை இயக்குனர் சித்தார்த் என்பவர் இயக்கவுள்ளாராம். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க ‘சொர்க்கவாசல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆர் ஜே பாலாஜியின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 16 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.  இந்நிலையில் இன்று அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்