விஜய் குரலில் பரவி வரும் போலி ஆடியோ: புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

சனி, 30 செப்டம்பர் 2023 (16:25 IST)
விஜய் குரலில் சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆடியோ போலியானது என விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்,.
 
லியோ படம் கர்நாடகாவில் வெளியாகாது என விஜய் பேசுவதாக ஆடியோ பரவி வந்தது. மேலும் சித்தா பட எதிர்ப்புக்கும் ஆடியோவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இவ்வாறு விஜய் பேசுவதாக பரவும் ஆடியோ போலியானது என்றும் இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்,.
 
மேலும் விஜய் பேசுவதாக பரவும் போலி ஆடியோவை பரப்பியவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்