இனிமே தியேட்டரே வேண்டாம்: அதிரடி முடிவு எடுக்கும் தயாரிப்பாளர் சங்கம்

சனி, 10 மார்ச் 2018 (18:34 IST)
மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் கியூப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்காக என்று கூறப்பட்டாலும் உண்மையில் பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் தான் என்று கூறப்படுகிறது.

ஒருபக்கம் மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு தயாரிப்பாளர் பக்கமிருந்து வந்ததும், மார்ச் 16 முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இன்று முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்த பணியும் கிடையாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதிக கட்டணம், அதிக பார்க்கிங் கட்டணம், கொள்ளை விலையின் தின்பண்டம் ஆகியவை காரணமாக தியேட்டரில் கூட்டம் குறைந்துவிட்டது. மேலும் ரூ.5 கோடி பட்ஜெட் படத்திற்கும் ரூ.200 டிக்கெட், ரூ.50 கோடி பட்ஜெட் படத்திற்கும் அதே டிக்கெட் என்ற முறையை மாற்றி சின்ன பட்ஜெட் படத்திற்கு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.

இந்த நிலையில் ஒருசில முன்னணி தயாரிப்பாளர்கள் இனிமேல் தியேட்டரே வேண்டாம் என்று வெப்சீரியலை நோக்கி செல்ல தொடங்கிவிட்டனர். இதற்கு முதல் பிள்ளையார் சுழியாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வெப் சீரியலை பாபிசிம்ஹா நடிப்பில் தயாரிக்கவுள்ளது. இந்த வெப்சீரியல் வெற்றி பெற்றால் இனி தியேட்டர் நிலைமை என்ன ஆகுமோ? தெரியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்